மே 1 முதல் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. முழு பட்டியல் இதோ!

Published by
Surya

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 17 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்பொழுது 45 வயதிற்கு மேலானவர்களுக்கு கோவிஷில்ட், கோவாக்ஸின் என 2 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. அதனைதொடர்ந்து மே 1-ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது. இதனால் கருத்தில் கொண்ட மாநில அரசுகள், தடுப்பூசிகளை போடும் பணிகளை தீவிரமாகியுள்ளது. இதில் சீரம் நிறுவனம் தயாரித்து வரும் கோவிஷில்ட் தடுப்பூசி, 400 முதல் 600 ருபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சில மாநிங்களில் மே 1 முதல் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி இலவசமாக போடும் மாநிலங்கள்:

தமிழ்நாடு: தமிழகத்தில் 18-45 வயதுள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

கேரளா: கேரளாவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா: 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

தெலுங்கானா: அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஹரியானா: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

மத்திய பிரதேசம்: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

ஜம்மு-காஷ்மீர்: 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

ஹிமாச்சல் பிரதேஷ்: 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

கோவா: 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

சத்தீஸ்கர்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

பீகார்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

உத்தரபிரதேசம்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

அசாம்: அசாம் மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் 18 வயதிற்கு மேல் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், மே 5 முதல் இலவச தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

7 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

55 mins ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

56 mins ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

1 hour ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

2 hours ago