“18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்”- அசாம் அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியா முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 45 வயதிற்கு மேலானவர்களுக்கு கோவிஷில்ட், கோவாக்ஸின் என 2 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது.
மேலும் மத்திய அரசு, மே 1-ம் தேதி முதல் 18 – 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான முன்பதிவு 28-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.