மகாராஷ்டிராவின் அனைத்து மருத்துவமனைகளிலும் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி!
மஹாராஷ்டிராவில் தற்பொழுது முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக அனைத்து சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்களுக்கும் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட அளவில் தடுப்பூசிகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவுக்கு இதுவரை 1.7 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்ட தடுப்பூசிகளை இதுவரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் முதல்கட்டமாக எடுத்து கொண்டுள்ளாராம். குறைவாக இருப்பதால் ஆறு மையங்களில் மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக மஹாராஷ்டிராவுக்கு வழங்கப்பட உள்ள தடுப்பூசிகள் வந்து சேர்ந்த பின் மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்குமாறு செய்யப்படும் என மாநில நோய்த்தடுப்பு அதிகாரி திலீப் பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளார்.