மத்திய பிரதேசத்திலும் கொரோனா தடுப்பூசி இலவசம்- பாஜக அறிவிப்பு..!
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நேற்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அதில், பீகார் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தனர். இதனை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கும் கொரோனா தடுப்பூசியை வாங்க முடியாத ஏழைகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.