ஆந்திராவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி!
ஆந்திர மாநிலத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது கொரோனா மூன்றாம் அலை விரைவில் ஏற்பட உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலும் இந்த மூன்றாம் அலையில் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் எநிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாகப் கடைபிடிக்க வேண்டும் எனவும், தடுப்பூசிகள் போட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் தற்போது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்பநல இயக்குனரான மருத்துவர் கீதா பிரசாதினி அவர்கள் கூறுகையில், கொரோனா மூன்றாம் அலை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும், நேற்றுவரை 5.5 லட்சம் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 4.5 தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை விரைவில் நடைமுறைப்படுத்த அதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.