15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட COWIN செயலியில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்யலாம்
இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை, 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருந்துள்ளது. இதனால், பயோடெக் நிறுவனம் தனது தடுப்பூசியை மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில், பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த சனிக்கிழமை இந்த ஒப்புதல் வழங்கியது.
இதைத்தொடர்ந்து, தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட அன்று இரவு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவித்தார். இந்நிலையில், 15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட COWIN செயலியில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்யலாம் என கோவின் தலைவர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…