#Breaking : விரைவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி!
- பிரதமர் மோடி நட்டு மக்களிடம் காணொலி மூலமாக உரையாற்றி வருகிறார்.
- விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் மிக அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்பொழுது பேசிய அவர், நாட்டிலுள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளதுடன், இன்னும் மூன்று தடுப்பூசிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.