குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி…! செப்டம்பரில் ஆய்வு முடிவு…! – எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா
குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பருக்குள் வரும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது மூன்றாவது அலை பரவக் கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பருக்குள் வரும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமல்லாது, இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கான சோதனைகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.