அடுத்த 6 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஹர்ஷ்வர்தன்

இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கான உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் (High-level Group of Ministers on Covid-19) 22-வது கூட்டம் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர், இந்தியாவில் கொரோனா தொற்றின் வளர்ச்சி 2 சதவீதத்துக்கு குறைந்துள்ளதாகவும், உலகத்திலேயே மிகவும் குறைவாக உயிரிழப்பு விகிதம் 1.45% இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் மரபணு வரிசைப்படுத்துதல் மற்றும் கொரோனா வைரஸை தனிமைப்படுத்துவதன் மூலம் ஒரு உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். அடுத்த 6 முதல் 7 மாதங்களில் நமது இலக்கான சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்குவதை நாம் விரைந்து செயலாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சுமார் 1 கோடிக்கு மேல் உள்ளன. அதில், 95.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகின் கொரோனா மீட்பு விகிதங்களில் இந்தியா 95.46 சதவீதமாக உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மாநில, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே மற்றும் மாநில அமைச்சர் நித்யானந்த் ராய் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
February 21, 2025