ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ .1000 என்று ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரசால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ககொரோனா தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பயோஃபார்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. தானாக முன்வந்த 1077 தன்னாலர்வர்கள் மீது கொரோனா தொற்று செலுத்தப்பட்டது. அதன்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை அவர்கள் மீது செலுத்தியது.
இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட 1077 தன்னாலர்வர்கள் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாக அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரியவந்ததாக கண்டறியப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள புனேவை தலைமை இடமாக கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கான அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது.
இதுகுறித்து, சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குனர் ஆதார் பூனவல்லா கூறுகையில், ஆகஸ்ட் மாதம் 4,000-5,000 தன்னார்வலர்களுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் தொடங்கும் என்று அவர் கூறினார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்தப்பட்ட பரிசோதனையில் வயதானவர்களை அவர்கள் தேர்வு செய்யவில்லை எனவே இந்தியாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வயதானவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மும்பை, புனே நகரில் இருந்து தங்கள் தேர்வுசெய்வர்கள் என கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியின் விலை ரூ.1000 இருக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…