கொரோனா தடுப்பூசி : 97% பேர் திருப்தி தெரிவித்துள்ளனர் – மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்

இந்தியாவில் இதுவரை 45,93,427 வழங்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வந்தது. தற்போது இதற்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட நிலையில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 45,93,427 வழங்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய மிக விரைவாக நாடாக இந்தியா மாறியுள்ளது. 4 மில்லியன் தடுப்பூசிகள் வழங்க 18 நாட்கள் மட்டுமே ஆனது என்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களின் நோய்த்தடுப்பு மருந்துகளே நாங்கள் செய்து கொண்டிருக்கும்போது, தடுப்பூசி போடப்படும் தளமாக 1,739 தனியார் மையங்களையும், 5,911 பொது மருத்துவமனைகளையும் பயன்படுத்துகிறோம் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தடுப்பூசி போடப்பட்டு ஒரு நாளைக்கு பின் அனைத்து தடுப்பூசி போடபட்ட நபர்களின் தொலைபேசிக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. மொத்தத்தில் 5,12,128 தடுப்பூசி போட்டு, அதில் 97 சதவீதத்துக்கும் அதிகமானோர் திருப்தி அடைந்து உள்ளதாக கூறினார். நோய் தடுப்பு மருந்துகளில் மத்தியப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதத்துக்கும் அதிகமானோர் இப்போது தடுப்பூசிகளின் முதல் டோசை எடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025