குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனாவின் இரண்டாம் அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பரவும் வீதம் சற்று குறைந்துள்ளது இருந்தபோதிலும் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தடுப்பூசிகளை தேவையான அளவு கையிருப்பு வைக்கவும் கூறி வருகின்றனர்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் 12 முதல் 18 வயதிற்குரிய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தெரிவித்திருந்தது.
தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளதாவது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சைடஸ் கேடில்லா நிறுவனத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது. இது ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் இது பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…