கர்நாடகாவில் 18 மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தாமதமாகலாம் – கார்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர்
கர்நாடகாவில் 18 மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தாமதமாகலாம் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புச் எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, கர்நாடகாவில் 18 முதல் 45 வயது உடையவர்கள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடுவதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் .ஏனெனில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறையை காணப்படுவதால் மே 1 முதல் தொடங்கவிருந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தாமதம் ஆகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புனேவில் உள்ள சீரம்சீரம் இன்ஸ்டிடியூட்டிடம், நாங்கள் ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி வேண்டும் என தெரிவித்துள்ளோம். ஆனால் நாளை முதல் திட்டமிட்டபடி எங்களுக்கு தடுப்பூசி வழங்க அவர்கள் இன்னும் தயாராக இல்லை. எனவே யாரும் மே-1ம் தேதி யாரும் தடுப்ப்பூசி போடும் மையத்திற்கு செல்ல வேண்டாம் தெரிவித்துள்ளார்.