இந்தியாவில் இதுவரை 63.10 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது. முன்கள வீரர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இந்தியாவில் இதுவரை 63.10 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
மேலும், மொத்த கொரோனா பாதிப்பில் 71% பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் பாதிப்படைந்தவர்களில் 3.12% பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 15 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இறப்புகூட பதிவாகவில்லை. 7 மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களாக ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை. 33 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடைய, தமிழகத்தில் இதுவரை 1.74 லட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…