Corona update : மும்பை தாராவியில் அதிகரிக்கும் கொரோனா !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் 23452 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 723 பேர் உயிரிழந்துள்ளனர். 4813 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், மும்பை தாராவியில் இன்று மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் பதிப்பு எண்ணிக்கை 220ஆக உயர்ந்து நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.