Corona update: மகாராஷ்டிராவில் 5,652 ஆக உயர்வு ! மக்கள் அச்சம் !

Default Image

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 21,393 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1400 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சமூக தொற்றை தடுக்க மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5,652 -ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 269-ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் 2407 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டில்லியில் 2248 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்