INDIA: கடந்த 24 மணி நேரத்தில் 2411 பேருக்கு கொரோனா உறுதி !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,411 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 37,776 ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் மொத்த பாதிப்புகளில் 26,535 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 10,017 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 71 இறப்புகளுடன், இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை 1,223 ஆக உள்ளது.