டெல்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா எடுத்து வருகிறது. இந்தியாவில் தற்போதுவரை 21700 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 686 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4325 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் துப்புரவுபணியாளர்கள் என அனைவரும் தங்களது குடும்பத்தை பிரிந்து அயராத பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்திற்கு பிறகு அதிக பாதிப்பு உள்ள டெல்லியில் இதுவரை 2,376 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெல்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…