கொரோனா மருத்துவம்.! தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்.! முறைப்படுத்துமா அரசு.?

Default Image

சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கா வாங்கப்படும் அதிக கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.  

நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், அரசு தனியார் மருத்துவமனைகளில் தற்போது அதிகபட்சமாக கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அரசு மருத்துவமனைகளில் இலவச கட்டணம் தான். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. 

கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் 4500 ரூபாய் வாங்கவே அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சில தனியார் மருத்துவமனைகள் 6000 ரூபாய் வரை வாங்குவதாகவும், முடிவு தெரிய 2 நாட்கள் ஆகிறது இதனால், இரண்டு நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பிக்கப்படாமலே அறை வாடகை வசூலிக்க படுகிறதாம்.  

மேலும், சில மருத்துவமனைகளில் ஒரு நாள்  அறை கட்டணம் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் கூட வசூலிக்கப்படுகிறதாம். ஐசியூ அறை கட்டணம், மருத்துவர் அணியும் கவச உடை செலவு ஆகியவை நோயாளியின் கணக்கில் வசூலிக்கப்படுகிறதாம். 

தனியார் மருத்துவமனைகளின் இந்த கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. 

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் சி N.ராஜா கூறுகையில்,’தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை செலவுகளை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிகிச்சை பெற எளிதாக இருக்கும்.’ என தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்