கர்நாடகாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்ட முடிவில் தெரிவித்ததாவது,
கர்நாடகாவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை குறைக்குமாறு தெரிவித்தனர். அதில், தனியார் மருத்துவமனையில் பொதுவார்டில் சிகிச்சை அளிப்பவர்களுக்கு 33% கட்டணம் குறைக்கப்படும். ஆக்ஸிஜன் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யு வார்டில் 40% விலைக் குறைப்பும், தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யு வார்டுகளில் 28.57% விலைக் குறைப்பையும், வென்டிலேட்டருடன் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவில் 28.57% விலையை குறைக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
அதாவது, பொது வார்டுக்கு ரூ. 10,000மும், ஆக்ஸிஜன் வசதியுடன் வார்டுக்கு ரூ. 12,000 மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவுக்கு வார்டுகளுக்கு ரூ. 15,000, மற்றும் வென்டிலேட்டருடன் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யுவுக்கு- ரூ. 25,000 என விலை நிர்ணயிக்குமாறு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 14 நாட்கள் பணிகளை செய்யுமாறும், 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…