உயிரிழந்த பிரேதத்திற்கு கொரோனா சிகிச்சை – மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு!

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாந்தட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரமணா பட பாணியில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்த மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாந்தட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கடந்த மாதம் ஏப்ரலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50,000 கட்டணத்தை முன்பணமாக குடும்பத்தினர் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி அவருக்கு மிகவும் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். எனவே, அவரது மருத்துவ செலவிற்காக 35 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு நோயாளியின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த பணத்தை செலுத்திய பின்னர் மூன்று நாள் கழித்து மீண்டும் கட்டணம் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும் கொடுத்துள்ளனர். இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் நோயாளி உயிரிழந்து விட்டதாக தெரிவித்து சான்று அளித்துள்ளது. ஆனால், கடந்த 21ம் தேதியே நோயாளி உயிரிழந்துவிட்டதாக இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்த நோயாளியின் குடும்பத்தினர் பணம் பறிப்பதற்காக உயிரிழந்த நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து சிவாஜி நகர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. எனவே, அந்த தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது சிவாஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்