டெல்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை உருவாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மராட்டியம் மற்றும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக டெல்லி அதிக கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை கொரோனாவால் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், டெல்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்றை 600 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை டெல்லி முதல் மந்திரியான கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரியான மனிஷ் சிசோடியா ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கெஜ்ரிவால், 600படுக்கைகளுடன் கூடிய இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் 200படுக்கைகள் தயார் நிலையிலும், மற்ற 400 படுக்கைகள் விரைவில் தயார் செய்யப்பட்டு, இன்னும் சில நாட்களில் இந்த கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்..
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…