மகாராஷ்டிராவில் இதுவரை 9,318 பேருக்கு கொரோனா.!
மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,318 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆகவும் உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் குறையாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நிறைவடைய உள்ள ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் 31,332 பாதிக்கப்பட்டு, 1007 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 31,332 பேரில் 7696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகபடச்சமாக மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு அதிகம். மும்பை, புனே போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ளதால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,318 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 1,388 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.