அதிகாரிக்கு கொரோனா.., பொறுப்பை நிதின் கட்கரிக்கு மோடி ஒப்படைக்க வேண்டும்.., சுப்பிரமணியம் சுவாமி.!
கொரோனா தொற்றுநோய் தடுப்பு முயற்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்க வேண்டும் என சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பத்திக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை உள்ளது.
இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கொரோனா பிரச்சினை குறித்து மோடி அரசுக்கு பலமுறை அறிவுறுத்தியுள்ளார். இப்போது கூட, அவர் தனது ட்விட்டர் மூலம் மீண்டும் ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதில், கொரோனா தொற்றுநோய் தடுப்பு முயற்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
India will survive Coronavirus Pandemic as it did Islamic invaders and British Imperialists. We could face one more wave that targets children unless strict precautions now are taken. Modi should therefore delegate the conduct of this war to Gadkari. Relying on PMO is useless
— Subramanian Swamy (@Swamy39) May 5, 2021
மேலும், இந்த தொற்றுநோய்க்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாம் மூன்றாவது அலைகளையும் எதிர்கொள்வோம், இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.