ராம் ஜன்மபூமி அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ்க்கு கொரோனா உறுதி.
ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் கொரோனா சோதனை செய்துள்ளார். இந்நிலையில் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது அவர் மூச்சுத் திணறல் குறித்து மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் விழாவில் 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட பூமி பூஜையில் தாஸ் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கிடையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோபால் தாஸ்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மேதாந்தாவின் டாக்டர் ட்ரேஹனுடன் பேசினார். சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் மதுரா மாவட்டதிற்கு உத்தரவிட்டுள்ளார்.
2003- ஆம் ஆண்டில் ராம்சந்திர பரம்ஹான்ஸின் மரணத்திற்குப் பிறகு ஜனவரி 1993 இல் விஸ்வ இந்து பரிஷத் உருவாக்கிய அறக்கட்டளையான ராம் ஜன்மபூமி நியாஸை அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…