அம்பன் புயல் மீட்புப்பணியில் ஈடுபட்ட 49 என்.டி.ஆர்.எப். வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, மே 20-ம் தேதி அதிதீவிர புயலாக மாறியது. இதனையடுத்து, 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான பாலங்கள், வீடுகள், மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தது.
இந்த புயலால் 80-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக மேற்கு வங்கம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடியும் , ஒடிஷாவிற்கு ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கினார். புயலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் படையும் என்.டி.ஆர்.எப். படையும் வரவழைக்கப்பட்டது.
இவர்களில் 178 வீரர்கள் தங்களது பணி முடிந்து ஒடிசாவிற்கு சென்றனர். மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில். 49 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுபி சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…