மணிப்பூர் சுகாதாரத்துறை மந்திரி எல் ஜெயந்தகுமாரின் உறவினர் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பிஷும்தோங் பகுதியில் உள்ளவர்கள்.
நேற்று ஜெயந்தகுமார் ஒரு பேஸ்புக் பதிவில், கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்த முக்கியமான போராட்டத்தின் போது, எனது உறவினர்களில் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எனது அலுவலக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்க ளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், நானும் எனது ஊழியர்களும் அனைவரும் கொரோனா நெகடிவ் என வந்தது. ஆனால், அதில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது என கூறினார். மேலும், சுகாதாரத் துறையால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். பீதி அல்லது கவலைப்பட ஒன்றுமில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக போராட முடியும் என்பதை வெளிப்படுத்திய அமைச்சர், வீட்டிலேயே இருக்கவும், முகமூடி அணியவும் வலியுறுத்தினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…