கோவாக்ஸின் பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா.!
கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை உடலில் செலுத்தி பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏழை எளிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர் .அந்த வகையில் தற்போது ஹரியானா மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ள அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கெடுத்து , நவம்பர் 20-ம் தேதி கோவாக்ஸின் அவரது உடலில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் தற்போது 67 வயதான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில் , எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அம்பாலா கண்டோன்மென்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ,என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்டு கொண்டுள்ளார்.
I have been tested Corona positive. I am admitted in Civil Hospital Ambala Cantt. All those who have come in close contact to me are advised to get themselves tested for corona.
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) December 5, 2020