டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா உறுதி.!
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில், பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது உறுதியானது.
டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில், பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் என்னை நானே தனிமைப்படுத்தியுள்ளேன். தற்போது காய்ச்சலோ வேறு பிரச்னையோ இல்லை. நான் நலமுடன் உள்ளேன். விரைவில் உங்கள் ஆசிர்வாதங்களுடன் பணிக்குத் திரும்புவேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
हल्का बुख़ार होने के बाद आज कोरोना टेस्ट क़राया था जिसकी रिपोर्ट पोज़िटिव आई है. मैंने स्वयं को एकांतवास में रख लिया है.
फ़िलहाल बुख़ार या अन्य कोई परेशानी नहीं है मैं पूरी तरह ठीक हूँ. आप सब की दुआओं से जल्द ही पूर्ण स्वस्थ होकर काम पर लौटूँगा.— Manish Sisodia (@msisodia) September 14, 2020