கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,058 பேருக்கு கொரோனா.!
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 9,058 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 3,51,481 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 5,159 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,54,626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 135 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,837 ஆக உயர்ந்துள்ளது.