ஒரே நாளில் 55 காவலர்களுக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1300 ஐ கடந்தது!
மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 55 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1328 ஆக உயந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 2033 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35058 ஆக உயர்ந்துள்ளது. அதில் 8437 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் புதிதாய் 55 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1328ஆக உயர்ந்துள்ளது.