மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அரசு பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வந்தாலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனா பரவளின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே மகராஷ்டிராவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அண்மையில் குறைந்து இருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகராஷ்டிராவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில், வாஷிம் எனும் மாவட்டத்தில் உள்ள பாவனா அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் பணியாற்றக்கூடிய மூன்று ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…