விமான விபத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் உட்பட 22 கேரள அதிகாரிகளுக்கு கொரோனா.!
கேரளாவின் மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மொத்தம் 22 அதிகாரிகள் கொரோனா பரிசோதனை சோதனை செய்தனர் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது.
இந்நிலையில் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே.கோபாலகிருஷ்ணன் உட்பட 21 ஊழியர்களுக்கு இன்று கொரோனா பாசிடிவ் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளியன்று மீட்புப் பணிகள் நிறைவடைந்ததிலிருந்து சோதனை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெட்டியில் பேசிய மலப்புரம் மருத்துவ அதிகாரி மீட்புப் பணிகள் முடிந்ததும் உயர் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றார். இந்த துயர சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட 18 பேர் உயிர் இழந்தனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.