#BREAKING: கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா ; 83 பேர் இறப்பு- மத்திய சுகாதாரத்துறை…!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; 83 பேர் இறப்பு.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,938 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,685 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 253 குறைவு. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 67 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 5,16,775 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,499 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,78,097 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 22,427 ஆக இருந்த நிலையில், தற்போது 21,530 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,82,55,75,126 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,82,451 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.