டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், மேலும் ஜாக்கிரதையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ராணுவ வீரர்கள், நோய்த்தொற்று கண்டறியப்பட்டதும் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறியே இல்லை என்றும் ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…