#BREAKING: கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு கொரோனா ; 149பேர் இறப்பு- மத்திய சுகாதாரத்துறை…!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; 149 பேர் இறப்பு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,421 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 149 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 5,21,004 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 1,826 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,82,262ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 16,187 ஆக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,83,20,10,030 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,90,658 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.