இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா..!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1,33,58,805 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 839 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மொத்தமாக உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,20,81,443பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 90,584 பேர் வீடு திருப்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 11,08,087 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி 10,15,95,147 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதைபோல் இதுவரை 25,66,26,850 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் நேற்று 14,12,047 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.