கொரோனா மூன்றாம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது – மத்திய சுகாதார அமைச்சக உயரதிகாரி!

Default Image

கொரோனா மூன்றாம் அலையால் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அவர்கள் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றால் நாடு முழுவதும் இதுவரையில் 2.2 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் 97% மக்களை பாதுகாப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியம் எனவும், நாம் பாதுகாப்பு அம்சங்களை கைவிட்டுவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதுடன் கட்டுப்பாடுகளை பின்பற்றினாலே மூன்றாவது அலை வந்தாலும் அது சுகாதார அமைப்பை கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசித் திட்டத்தில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களில் தடுப்பூசி தொடர்பான தயக்கம்தான் முக்கியமானதாக இருப்பதாகவும், தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகள் வதந்திகள் மற்றும் சமூக ஊடகங்களின் வழியாக கூறப்பட்ட கூடிய தகவல் காரணமாக பல கிராமப்புறங்களில் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வசிக்க கூடியவர்கள் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளை உடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை சமூகத்திற்கு நினைவு படுத்துவது முக்கியம் எனவும், இதன் மூலம்தான் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்