ஜூலை 4 ஆம் தேதி முதலே கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதாக ஹைதராபாத் விஞ்ஞானி விபின் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம், இந்தியாவிலும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக அதிக அளவில் பரவ தொடங்கியது. இதனால் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளும் மிக அதிகமாக இருந்த நிலையில், தற்போது தான் நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது.
இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை விரைவில் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கலாம் என ஹைதராபாத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
463 நாட்களில் நாட்டில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்வதற்கான சிறப்பு வழியை உருவாக்கிய மருத்துவர் விபின் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் கூறுகையில், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது போல, ஜூலை 4-ஆம் தேதியே நாட்டில் மூன்றாம் அலை தொடங்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…