மகாராஷ்டிராவில் உச்சத்தில் இருக்கும் கொரோனா கடந்த 24 மணி நேரத்தில் 985 பேர் உயிரிழப்பு

Default Image

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 63,309 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது வரை இல்லாத உச்சமாக 985 இறப்புகள் பதிவாகியுள்ளது.தற்பொழுது வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6.73 லட்சத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.

இது வரை மகாராஷ்டிராவில் பாதிக்கபட்டவர்களின் 44,73,394  ஆக உயர்ந்துள்ளது.மும்பையில் மட்டும் 24 மணி நேரத்தில் 4,966 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்;மாநிலத்தின் மீட்பு விகிதம் 83.4 சதவீதம்; 61,181 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதுள்ள கொரோனா  தொடர்பான கட்டுப்பாடுகளை அரசு 15 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது என்று சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் இன்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும், இது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எடுப்பார் என்று திரு டோப் கூறினார்.

கடந்த வாரம் முதலமைச்சர் கொரோனா பரவல் தீவிரத்தினை எதிர்த்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிவித்தார். இந்த நடவடிக்கைகள், அத்தியாவசியமற்ற தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வருவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதலுக்கான கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்