இந்தியாவை வேட்டையாடும் கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 298 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 லிருந்து 298 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் குணமடைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63, கேரளாவில் 40, உத்தரபிரதேசம் 24, டெல்லி 26, கர்நாடகா 15, தெலுங்கானா 19, ராஜஸ்தானில் 17, ஹரியானா 17, லடாக் 13 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.