5 இடங்களில் கொரோனா சோதனை ஆய்வகங்கள் – உத்தரப்பிரதேச முதல்வர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறிய 5 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார். வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லக்னோவில் 2 ஆய்வகங்களும், அலிகார், வாரணாசி மற்றும் கோரக்பூரில் தலா ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் இதுவரை 85 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலமாக கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அதை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் அறிவித்தது. கொரோனா அச்சம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025