குஜராத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி
குஜராத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரை.
குஜராத்தில் அதிக கொரோனா பாசிடிவ் வீதத்தை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று வலியுறுத்தினார். சமீபத்திய கொரோனா நிலைமை குறித்து குஜராத்தின் விஜய் ரூபானி உட்பட 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடனான உரையாடகளின் போது பிரதமர் இந்த கருத்தை முன் வைத்தார்.
சோதனை விகிதம் குறைவாகவும் நேர்மறை விகிதம் அதிகமாகவும் உள்ள மாநிலங்களில் சோதனை அதிகரிக்க வேண்டும். இந்த மாநிலங்கள் பீகார், குஜராத், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா உள்ளது என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த மாநிலங்களில் சோதனையை அதிகரிப்பதற்கு இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
குஜராத்தில் அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்த 34 அரசு மற்றும் 59 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. கூடுதலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நகரங்களிலும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் தற்போது சுமார் 47,000 கொரோனா படுக்கைகள் மற்றும் 2,300 வென்டிலேட்டர்கள் உள்ளது என்று ரூபானி கூறினார். மேலும் குஜராத்தின் குணமடைந்தோர் 76 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று பிரதமருக்கு தெரிவித்தார். இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக குஜராத்தின் இறப்பு விகிதம் 7.8 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக குறைந்துள்ளது என்றார் .