வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை.!
வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல இடங்களில் பரிசோதனை மையங்களும், தேவையான கட்டுபாட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படுவார்களாம். பரிசோதனையில் நெகட்டிவாக இருந்தால் அவர்கள் கட்டாயமாக ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் ஏழு நாட்கள் வீட்டிலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
கர்ப்பிணி பெண்களும், 10வயதிற்குட்பட்டவர்களுடன் பயணம் செய்பவர்களும், குடும்பத்தில் யாராவது மரணமடைந்து செல்வதற்கு பயணம் செய்பவர்களும், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கட்டாய நிறுவன தனிமைப்படுத்தலிருந்து நிபந்தனை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பரிசோதனைக்கான முடிவுகள் வர குறைந்தது 8 மணி நேரமாகும் என்பதால் அனைத்து பயணிகளுக்கும் சிறப்பு காத்திருப்பு பகுதி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தான் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் யோசனையை முன் வைத்துள்ளதாகவும், அதற்கு இன்னும் சிவில் விமான அமைச்சகம் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.