டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,400-லிருந்து, ரூ.800-ஆக குறைப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிக அளவிலான பணம் செலவாவதால் மக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள தயங்குகிறார்கள். இதனை அடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் வசதிக்காக பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளார்.
இதற்கு முன்பதாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ரூ.2,400 செலவானது. ஆனால், தற்போது முதல்வரின் உத்தரவின் படி, இனிமேல் ரூ.800 க்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், குறைக்கப்பட்ட இந்த கட்டணம் குறித்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் விளம்பர பலகை வைக்க வேண்டும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…