நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து ஆய்வு

Default Image

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தொடர்பான அறிவிப்புகளை மத்திய சுகாதார அமைப்பு தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதே வழி என்று கூறிருந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனிடையே கொரோனா தொற்று இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா என்று கேள்வி எழுந்தது. ஆனால், கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவிதது.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து ஆய்வு நடத்த உள்ளது. இந்த சோதனை மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு நடத்துகிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் 10 இடங்களில் இருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
minister regupathy
Ind vs Aus - Boxing Day Test
FIR banned
Comrade Nallakannu - Tamilndu CM MK Stalin
Mutharasan - Vaiko - Nallakannu - MK Stalin - K Balakrishnan
Virat kohli argument with Australian player Sam konstas