கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி மருந்து கொடுக்கலாம் .!
இந்தியாவில் கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய ,மாநில அரசு கூறியுள்ளது.
சீனா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டு வருகிறது.இதையெடுத்து ஜெய்ப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 இத்தாலி சுற்றுலா பயணிகள் இருந்த நிலையில் அவர்களுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டது. இதனால் இருவரும் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடல் நிலை , வயதை பொறுத்து எச்.ஐ.வி.,க்கு வழங்கப்படும். ‘லோபினாவிர்’ மற்றும் ‘ரிடோனாவிர்’ ஆகிய மருந்துகளை வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு, சீறுநீரக கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த மருந்துகளை வழங்க கூறப்படுகிறது.