சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவும் – மத்திய அரசு எச்சரிக்கை!

Default Image

சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காத ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாக தன் பரவிக்கொண்டிருக்கிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்து கொண்டே இருக்கின்றனர். இந்த கொரோனாவுக்கு எதிராக  தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றி இருப்பதுமே முற்றிலும் கொரோனாவை அழிப்பதற்கான வழி என அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. இருப்பினும் பலர் அலட்சியமாக தான் தற்பொழுதும் இருக்கின்றனர்.

இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர்கள் லால் அகர்வால் அவரகள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஒரு கொரோனா நோயாளி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வெளியில் செல்லும் பொழுது அவர் மூலமாக 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். அதே நோயாளி வெளியில் செல்வது 50% ஆவது குறைக்கும் பொழுது 30 நாட்களில் வெறும் 15 பேருக்கு தான் பரவும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அதே நோயாளி 75% வெளியில் செல்வதை குறைத்து, பிறர் உடனான தொடர்பை குறைத்துக் கொள்ளும் பொழுது 30 நாட்களில் இரண்டு பேருக்கு தான் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார். அதுபோல மாஸ்க் அணிவதாலும் கொரோனா முற்றிலும் ஒழிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கொரோனா உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து இருந்தாலும் 10% தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், ஆனால் அனைவருமே மாஸ்க் அணிந்து செல்லும் பொழுது கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்