கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது – ராகுல் காந்தி!

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது கவலையளிப்பதாகவும், மக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது தான் குறைந்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, கேரளாவிற்கு உதவும் வகையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பவுள்ளது. இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், இதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டுதலையும் கேரள மக்கள் பின்பற்றுமாறு கேரளாவில் உள்ள தன்னுடைய சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தயவு செய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Rising cases of Coronavirus infections in Kerala are worrying.
I appeal to our brothers and sisters in the state to follow all safety measures & guidelines.
Please take care.
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2021