இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,919 லிருந்து 2,26,770 ஆக அதிகரிப்பு.!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,919 லிருந்து 2,26,770 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,919 லிருந்து 2,26,770 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,075 லிருந்து 6,348 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107 லிருந்து 1,09,462 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்த 1,10,960 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 273 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவில் இருந்து 33,681 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,710 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.